இந்திய பயிற்சியாளர் பதவியை நிராகரித்த மகேல ஜெயவர்த்தன

 



இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனைத்தொடர்ந்து மேலும் அவர் இனியும் இந்திய அணியுடன் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டதால் பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான லட்சுமணன் மற்றும் கும்ப்ளே ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் முன்னதாக இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தினேவிடம் பிசிசிஐ பயிற்சியாளர் பதவிகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. ஆனால் ஜெயவர்த்தினே பிசிசிஐ-யின் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்றும் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில் தற்போது தனக்கு இருக்கும் பணிகள் சரியாக உள்ளதாகவும், அவர் இலங்கை அணிக்காக பயிற்சியாளராக செயல்பட விருப்பப்படுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை அவர் நிராகரித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரும் அனுபவம் வாய்ந்த ஜெயவர்த்தினே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக பயிற்சியாளராக இருப்பது மட்டுமின்றி உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளை அணிகளில் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது பயிற்சியின் தலைமையிலேயே மும்பை அணி 5 கோப்பையை கைப்பற்றியது.

தற்போது இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்ததற்கு முக்கிய காரணமாக அவர் இலங்கை அணிக்காக பயிற்சியாளராக செயல்பட அதிக விருப்பம் காட்டுவதே காரணமாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post